2025 ஜூலை 05, சனிக்கிழமை

டென்னிஸ் சம்பியன்ஷிப்பை வென்றது கேட்வே

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சந்துன் கொடித்துவக்கு

கொழும்பு ஏஷியன் சர்வதேசப் பாடசாலையால் ஒழுங்கமைக்கப்பட்ட, இலங்கை சர்வதேசப் பாடசாலைகளுக்கிடையான, 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் சம்பியன்ஷிப்பை கண்டி கேட்வே கல்லூரி கைப்பற்றியுள்ளது.

இளம் அணியாக விளங்கிய கண்டி கேட்வே அணி, 14 வயதான அனுகி பெலென்டகமாவால் தலைமை தாங்கப்பட்டிருந்தது. இவ்வணியில், 13 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒஷினி ஹேரத், செத்மி சுமனவீர, தருஷி பெலென்டகம ஆகியோர் ஏனைய வீராங்கனைகளாக இடம்பெற்றிருந்தனர்.

இத்தொடரில், கடந்த வருட சம்பியன்களான கொழும்பு சர்வதேசப் பாடசாலையை 2-1 என தோற்கடித்த கண்டி கேட்வே கல்லூரி, கொழும்பு கேட்வே கல்லூரியை 3-0 என தோற்கடித்ததுடன், ஏஷியன் சர்வதேசப் பாடசாலையை 3-0 என தோற்கடித்திருந்தது.

சர்வதேசப் பாடசாலைகளுக்கிடையேயான டென்னிஸ் தொடரில், இம்முறையே, முதற்தடவையாக கண்டி கேட்வே கல்லூரி பங்கேற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .