2025 ஜூலை 05, சனிக்கிழமை

டுவிட்டர் அணியிடம் எஸ்.ஈ.யு.எஸ்.எல் சவால் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 27 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவினால் பல்கலைக்கழக ஊழியர்களுக்கிடையே நடத்தப்பட்ட எஸ்.ஈ.யு.எஸ்.எல் சவால் கிண்ணத்துக்கான 10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு டுவிட்டர் அணியினரும், கல்விசாரா ஊழியர்களின் நைற்றைடர் அணியினரும் தெரிவாகியிருந்தனர். இதில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கல்விசாரா ஊழியர்களின் நைற்றைடர் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 114 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய டுவிட்டர் அணியினர், எட்டு விக்கெட்டுகளையிழந்து 9.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று 2016ஆம் ஆண்டுக்கான எஸ்.ஈ.யு.எஸ்.எல் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக, டுவிட்டர் அணியின் என். திவாகரும், தொடராட்ட நாயகனாக கல்வி சாரா ஊழியர்களின் நைற்றைடர் அணியின் ஜே.எம்.இன்பாஸும் தெரிவாகினர்.

பல்கலைக்கழக உடற்கல்விப் பிரிவின் பதில் பணிப்பாளர் ஐ.எம்.கடாபி தலைமையில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் இறுதி போட்டிக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், பீடாதிபதிகளான எம்.எஸ்.ஏ. மஸாஹிர், பௌசுல் அமீர் மற்றும் திணைக்களத் தலைவர்களும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .