Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 01 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லுரியின் தேசிய மட்ட விளையாட்டு சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லுரி பொன் விழா மண்டபத்தில் பாடசாலை அதிபர் செ.இரவீந்திரராசா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
முன்னதாக, குத்துச்சண்டை மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுக்களில் தேசிய ரீதியில் சாதனை படைத்த வீரர்கள் புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து மாலை அணிவித்து கல்லுரி மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சாதனை புரிந்த வீரர்களான, 2016ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டியிலே முதலாம் இடம்பெற்ற செல்வன் எம்.சர்மிளன், 2015ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டியிலே முதலாமிடம் பெற்றவர்களான வை.நிதர்சனா, கே.கனிசியா, இரண்டாமிடம் பெற்றவர்களான எஸ்.டிலக்சனா, ஜி.ஜெகதீஸ்வரன், மூன்றாமிடம் பெற்றவர்களான பி.ரூபன், கே.கலையரசி, எஸ்.சுதாகர், 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலே தேசிய ரீதியில் வர்ண சான்றிதழ் பெற்ற வீரனான எஸ்.விதுஸ்ரனும் அவரைப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு, 2016ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டியிலே தேசிய ரீதியில் முதலாம் இடம்பெற்ற எம்.சர்மிளனுக்கு மாஸ் ஆடைத் தொழிற்ச்சாலை நிறுவனத்தினர் அன்பளிப்புக்களை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட சிரேஷ்ர விரிவுரையாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ் கலந்து கொண்டார். இவர்களோடு, முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025