2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

தேசிய விளையாட்டுப் போட்டியின் 2ஆம் கட்டம்

Princiya Dixci   / 2016 மே 07 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியின் 2ஆம் கட்டப் போட்டிகள், நுவரெலியா சினிசிட்டா மாநகர மைதானத்தில் இன்று சனிக்கிழமை (07) காலை 10.30க்கு வைபவ ரீதியாக ஆரம்பமானது.

நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த போட்டிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இடம்பெற்றது.

இந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஆரம்ப நிகழ்வு அண்மையில் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதிகளாக மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ், மத்திய மாகாண விளையாட்டு சம்மேளனத்தின் பொறுப்பதிகாரி  குமுதினி ராஜபக்ஷ உட்பட  மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி பழனி விஜயகுமார் ஆகியோருடன் பலர் கலந்துகொண்டனர்.

இதன் இறுதிப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்ற அனைத்துக் கழகங்களுக்கும் பரிசில்கள் அன்றைய தினத்தில் வழங்கப்படவுள்ளது.

இன்றைய 2ஆம் கட்டப் போட்டியில் வலைப் பந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் எல்ல போட்டி ஆகிய போட்டிகள் உள்ளடங்களாக பல போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் அனைத்தும், எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி நிகழவுகளில் கலந்துகொள்ளுமாறு நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X