2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

திருகோணமலை வளர்மதி வி.க கரப்பந்தாட்டத் தொடர்

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர் ஏ.எச்

இருபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருகோணமலை வளர்மதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மின்னொளியிலான நான்கு பேர் கொண்ட கரப்பந்தாட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இத்தொடரானது அடுத மாதம் முதலாம் திகதி மாலை 7.00 மணிக்கு வளர்மதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

நான்கு பேர் கொண்ட குறித்த தொடரில் கலந்துகொள்ள 2,000 ரூபாய்மாத்திரமே கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

இத்தொடரில் வெற்றியீட்டுபவர்களுக்கான முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காமிடங்களுக்கான வெற்றிக் கிண்ணமும் பணப்பரிசும் வழங்கப்படும். மேலும் அரையிறுதி சுற்றுக்குத் தெரிவு செய்யப்படாத நான்கு கழகங்களுக்கும் வெற்றி கிண்ணமும் பரிசும் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .