Freelancer / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி. சுகிர்தகுமார்
கல்வியமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான
கராத்தேயில் திருக்கோவில் கல்வி வலயம் ஐந்து தங்கப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஒன்பது
பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஐந்து தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப்
பதக்கத்தையும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை பெற்றுக் கொண்டு
பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியிலேயே ஐந்து தங்கப்
பதக்கங்கள் தவிர, இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்களை
திருக்கோவில் வலய மாணவர் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டியில்
பங்குபற்றவுள்ளனர்.
மாணவர்களுக்கான பயிற்சிகளை ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.
கேந்திரமூர்த்தியின் நெறிப்படுத்தலின் கீழ் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே.
ராஜேந்திரபிரசாத், விளையாட்டு உத்தியோகத்தர் கே.சாரங்கன் ஆகியோர் வழங்கியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025