2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நரக்களி றோ.க.த டெவின் மெரிஷான் மூன்றாமிடம்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

அகில இலங்கை பாடசாலைகள் தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் மல்யுத்த போட்டியில் 18 வயதுக்குட்பட்ட 65 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட புத்தளம் நரக்களி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவன் டெவின் மெரிஷான் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

திகன உள்ளக விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமையிலிருந்து (27) திங்கட்கிழமை (30) வரை நடைபெற்ற மல்யுத்தப் போட்டிகளில் இவ்வித்தியாலய மாணவர் கெவின், ஜெரோன், சஞ்சய, பிரதீப் மற்றும் யதுர்ஷன் ஆகியோர் இலங்கையின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவருடன் போட்டியிட்டு காலிறுதி வரை முன்னேறி இருந்தனர்.

பாடசாலை அதிபர் ஜே.ஏ.எஸ். அமல்ராஜ் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட "பாடசாலை மல்யுத்த கழகத்தின்" பயிற்றுவிப்பாளராக முன்னாள் சர்வதேச மல்யுத்த வீரர் லசந்த பர்ணாந்து செயற்படுவதோடு பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர் யூ.எச்.எம். பர்ஹான் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மது அஸ்லிப் ஆகியோர் மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க பூரண ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். தேவையான மேலதிக ஆலோசனைகளை கல்பிட்டி கோட்ட உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் முஹம்மது பளீல்  வழங்குவது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .