Mithuna / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில், சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிளாஸ்டர் 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இம்ரான் 12.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்றது.
போதிய வெளிச்சமின்மை காரணமாக இம்ரானின் ஓட்ட எண்ணிக்கையானது மாற்றியமைக்கப்பட்ட நிலையில் டக்வேர்த் லூயிஸ் முறையில் பிளாஸ்டர் 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026