2024 மே 30, வியாழக்கிழமை

நியூசிலாந்துப் பெண்களை வீழ்த்திய இலங்கைப் பெண்கள்

Freelancer   / 2023 ஜூன் 28 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து பெண்கள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கைப் பெண்கள் அணி வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவி சோபி டெவின், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

மழையால் 28 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அமெலியா கெர் 40 (51), மடி கிறீன் 38 (30), சுஸி பேட்ஸ் 28 (35), ஜோர்ஜியா பிளிமர் ஆட்டமிழக்காமல் 23 (25), டெவின் 19 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுகந்திகா குமாரி, கவிஷா டில்ஹாரி, இனோக றணவீர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணித்தலைவி சாமரி அத்தப்பத்துவின் ஆட்டமிழக்காத 108 (83), விஷ்மி குணரத்னவின் 50 (74) ஓட்டங்களோடு 27 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.இப்போட்டியின் நாயகியாக அத்தப்பத்து தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .