2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீச்சல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

Mayu   / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

“மூ கல்குடா டைவர்ஸ்" அணியில் இணைந்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் உயிர்காப்பு நீச்சல் பயிற்சி பெற்று சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காகித நகரில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது.

மூ கல்குடா டைவர்ஸின் தலைவர் கே. பௌஸ்தீனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதிஆணையாளர் ஏ. தாஹிர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு சமுத்திர பல்கலைக்கழகத்தின் உதவிப் பணிப்பாளர் கே.பாலச்சந்திரன் உட்பட டைவர்ஸ் அணியின் உப தலைவர் கமால்தீன், பிரதித் தலைவர் றுபேஸ்கரன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதில்,  நீச்சல் பயிற்சி பெற்ற 60 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .