Editorial / 2019 மே 22 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான நீளம் பாய்தலில், சாவகச்சேரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ். கீர்த்திகன் முதலாமிடம் பெற்றார்.
யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 6.66 மீற்றர் பாய்ந்தே எஸ். கீர்த்திகன் முதலிடம் பெற்றிருந்தார்.
இதேவேளை, இந்த ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 6.53 மீற்றர் தூரம் பாய்ந்த சாவகச்சேரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த நா. நிதுஜன் இரண்டாமிடத்தையும், 6.27 மீற்றர் தூரம் பாய்ந்து காரைநகர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பா. சஜிந்தராம் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
5 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago