2025 ஜூலை 05, சனிக்கிழமை

பார்வையாளர் அரங்கத்துக்கு மேலதிகமாக நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பாலமுனை மைதானத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற பார்வையாளர் அரங்க நிர்மாணத்துக்காக மேலதிகமாக 20 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் 50 இலட்சம் ரூபாய் செலவில் இந்த  பார்வையாளர் அரங்கம் நிர்மாணிக்கப்படுகின்றது. இதன் நிர்மாணப்பணிகளை  சுகாதார பிரதியமைச்சர் திங்கட்கிழமை (30) மாலை  பார்வையிட்டதுடன்,  இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாக வேண்டுமெனவும் பணித்தார்.

இந்நிலையில், இந்த பார்வையாளர் அரங்க நிர்மாணத்துக்கு இன்னும் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்பாளருமான  எம்.ஏ.அன்ஸில் பிரதியமைச்சரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேலதிகமாக தேவைப்படும் நிதியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார்.

இந்த விஜயத்தில் அட்டாளைச்சேனை தள ஆயுர்;வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் சுகாதார பிரதியமைச்சரின் ஆலோசகர், வைத்தியர்; கே.எல்.எம்.நக்பர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் கலீல் றஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .