Freelancer / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு. கஜிந்தன்
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மினி ஒலிம்பிக் போட்டியில், யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கு அணி ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இவ்வாண்டு சம்பியனாகியது. இவ்வாண்டே முதன்முதலாக பெண்கள் பளுதூக்கல் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இதில், என். மிதுசா 49 கிலோ கிராம் எடைப் பிரிவில் 90 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை பெற்றார். கே. சனுஜா 49 கிலோ கிராம் எடைப் பிரிவில் 71 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். எச்.ஏ.ஐ.என் ரத்னநாயக்க 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் 100 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
ஜெ. பஜினா 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் 120 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெள்ளி பதக்கத்தைப் பெற்றார். ஆர். தசாந்தினி 76 கிலோ கிராம் எடைப் பிரிவில் 110 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றார். ஆர். தக்சாயினி 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் 100 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
டி.எம்.டி.எம். தனபால 87 கிலோ கிராம் எடைப் பிரிவில் 79 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். எஸ். ஜீவமலர் 87 கிலோ கிராம் எடைப் பிரிவில் 80 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
35 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago