Shanmugan Murugavel / 2025 நவம்பர் 04 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர் ஏ. எச்

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்ற திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த ஆர்.எம். நிப்ராஸுக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்றது.
இதன்போது குறித்த வீரரை சக உத்தியோகத்தர்கள் இணைந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த நிப்ராஸ், மிக நீண்ட நாள் கனவாக இருந்தது இவ்வாறான சாதனைகளை சர்வதேச மட்டத்தில் படைக்க வேண்டும் என இதனை எனது அயராத முயற்சியால் தற்போது அடைந்துள்ளேன் எனவும் தனக்கான இந்த கெளரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்த பிரதேச செயலாளருக்கும் தன்னை இந்த வெற்றியை அடைவதற்கு முழு திறனுடன் திறம்பட பயிற்றுவிப்பை வழங்கிய விளையாட்டு உத்தியோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான கே.எம். ஹாரிஸுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago