Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் திங்கட்கிழமை (31) இரவு நடைபெற்ற பி-லவ் கண்டி உடனான போட்டியில் கோல் டைட்டன்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டைட்டன்ஸ், டிம் செய்ஃபேர்ட்டின் 74 (39), ஷகிப் அல் ஹஸனின் 30 (21) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொஹமட் ஹஸ்னைன் 4-0-26-1, அணித்தலைவர் வனிடு ஹஸரங்க 4-0-27-1, முஜீப் உர் ரஹ்மான் 4-0-25-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 181 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கண்டி, கசுன் ராஜித (2), றிச்சர்ட் நகரவா (2), லஹிரு சமரக்கோன், ஷகிப் அல் ஹஸன் (2), தப்ரையாஸ் ஷம்சி (2), அகில தனஞ்சயவிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று 83 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயுகனாக செய்ஃபேர்ட் தெரிவானார்.
இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸுடனான போட்டியில் தம்புள்ள ஓறா வென்றது.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago