Freelancer / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற பி-லவ் கண்டியுடனான போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரைக்கர்ஸ், பாபர் அஸாமின் 59 (52), நுவனிடு பெர்ணாண்டோவின் 28 (31) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொஹமட் ஹஸ்னைன் 4-0-27-2, அணித்தலைவர் வனிடு ஹஸரங்க 4-0-22-0, முஜீப் உர் ரஹ்மான் 4-0-28-0, தனுக டப்ரே 2-0-14-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 158 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கண்டி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களையே பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக அஸாம் தெரிவானார்.
இதேவேளை மற்றைய போட்டியில் தம்புள்ள ஓறாவை சுப்பர் ஓவரில் கோல் டைட்டான்ஸ் வென்றது.
7 minute ago
8 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
14 minute ago