2024 மே 07, செவ்வாய்க்கிழமை

புதிய சாதனை படைத்த சென்றலைட்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2019 ஜனவரி 06 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் அணிகளில் இதுவரை காலமும் நிகழ்த்தப்பட்டிராத புதிய சாதனை ஒன்றை, யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் தம்வசப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டில் நடைபெற்ற போட்டிகளில், சென்றலைட்ஸ் அணி 26 போட்டிகளில் பங்குபற்றி, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று, கடந்தாண்டில் தோல்வியுறாத அணியாகச் சாதனை படைத்துள்ளது.

இந்த தொடர் வெற்றியின் மூலம் கடந்தாண்டில், ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக் கிண்ண, கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி) வெற்றிக் கிண்ண,   இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு மூன்று அணிகளுக்கிடையிலான வெற்றிக் கிண்ணத் தொடர்களில் சென்றலைட்ஸ் சம்பியனாகியுள்ளது.

சென்றலைட்ஸ் அணியின் கடந்தாண்டின் வெற்றிப்பயணமானது இவ்வாறு அமைந்தது.

 

1. ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற ஆளுநர் வெற்றிக் கிண்ணத் தொடரின் முதலாவது சுற்றுப் போட்டியில், யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணியை ஒரு விக்கெட்டால் வென்றது.

2. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக் கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டியில், ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது.

3. ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றுப் போட்டியில், யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியை 2 விக்கெட்டுகளால் வென்றது.

4. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக் கிண்ணத் தொடரின் முதற்சுற்று அரையிறுதிப் போட்டியில், சுழிபுரம் விக்டோரியா அணியை 7 விக்கெட்டுகளால் வென்றது.

5. மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக் கிண்ணத் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில், மானிப்பாய் பரிஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வென்றது.

6. மே மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற கே.சி.சி.சி வெற்றிக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் அணியை 3 விக்கெட்டுகளால் வென்று சம்பியனானது.

7. மே மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின்பிரிவு 3 அணிகளுக்கிடையிலான லீக் சுற்றுப் போட்டியொன்றில், டைட்டன்ஸ் அணியை 96 ஓட்டங்களால் வென்றது.

8. மே மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான லீக் சுற்றுப் போட்டியொன்றில், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 5 விக்கெட்டுகளால் வென்றது.

9. ஜூன் மாதம் 03ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான லீக் சுற்றுப் போட்டியொன்றில், றெயின்போ அணியை 8 விக்கெட்டுகளால் வென்றது.

10. ஜூலை மாதம் முதலாம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான தொடரின் காலிறுதிப் போட்டியில், விங்ஸ் அணியை 142 ஓட்டங்களால் வென்றது.

11. ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான தொடரின் அரையிறுதிப் போட்டியில், பற்றீசியன் அணியை 4 விக்கெட்டுகளால் வென்றது.

12. ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற ஏபி அணி நடத்திய யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியொன்றில், றெயின்போ அணியை 10 ஓட்டங்களால் வென்றது.

13. ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக் கிண்ணத் தொடரின் முதலாவது சுற்றுப் போட்டியில், விங்ஸ் அணியை 101 ஓட்டங்களால் வென்றது.

14. ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியொன்றில், ஜொலிஸ்ரார்ஸ் அணியை 7 விக்கெட்டுகளால் வென்றது.

15. ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் சென்றல் அணியை 43 ஓட்டங்களால் வென்றது.

16. ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியொன்றில், டிறிபேக் ஸ்ரார்ஸ் அணியை 118 ஓட்டங்களால் வென்றது.

17. செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியொன்றில், திருநெல்வேலி கிரிக்கெட் அணியை 9 விக்கெட்டுகளால் வென்றது.

18. செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், திருநெல்வேலி கிரிக்கெட் அணியை 87 ஓட்டங்களால் வென்றது.

19. செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான தொடரின் இறுதிப் போட்டியில், சுழிபுரம் விக்டோரியா அணியை 5 விக்கெட்டுகளால் வென்று சம்பியனானது.

20. செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது சுற்று லீக் போட்டியொன்றில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணியை 58 ஓட்டங்களால் வென்றது.

21. செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது சுற்று லீக் போட்டியொன்றில், ஜொனியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகளால் வென்றது.

22. செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது சுற்று லீக் போட்டியொன்றில், டைட்டன்ஸ் அணியை இரண்டு ஓட்டங்களால் வென்றது.

23. செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 6 விக்கெட்டுகளால் வென்றது.

24. செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 5 விக்கெட்டுகளால் வென்று சம்பியனானது.

25. ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணம் கிரிக்கெட் லீக் தொடரின் பிளே ஓஃப் சுற்றில், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 16 ஓட்டங்களால் வென்றது.

26. டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற அரியாலை சுதேசிய நாள் கொண்டாட்ட இருபதுக்கு - 20 தொடரின் முதற் போட்டியில், கிறாஸ்கொப்பர்ஸ் அணியை 12 ஓட்டங்களால் வென்றது.

சென்றலைட்ஸ் அணியின் இந்த வெற்றியின் பின்னால் உள்ள முழுமையான மனிதர், பொன்னம்பலம் கேதீஸன் என்பவரே. அணியை ஒழுங்கமைத்தல், வீரர்களைத் தயார்படுத்தல், தொடர்களில் அணியை பங்குபற்ற வைத்தல் தொடக்கம், சென்றலைட்ஸ் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் அங்கிருந்தவாறு, அணியை உற்சாகப்படுத்தி வரும் இவர், அணியின் இணைப்பாளர் ஆவார்.

ஞானசீலன் ஜெரிக் துசாந்தின் தலைமைத்துவத்தின் கீழ் சென்றலைட்ஸ் அணி, கடந்தாண்டில் இச்சாதனையை படைத்துள்ளது. ஜெரிக்துசாந்த் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் என்பதுடன், மத்திய வரிசையில் அணியின் துடுப்பாட்ட பலத்தைக் காக்கும் ஒரு வீரரும் ஆவார். 

நாகாராசா ஜெனோசன் - சகலதுறை வீரர் - அணியின் தூணாக இவரே காணப்படுவார். பெரும்பாலான போட்டிகளில் அணியின் ஒரு பக்க துடுப்பாட்ட பலமே இவரில் தங்கியிருக்கும். மேற்கொண்டு, மிதவேக வேகப்பந்துவீச்சாளராகவும் இருந்து விக்கெட்டுகளை வீழ்த்துவார்

சிறிஸ்கந்தராசா கௌதமன் - தேவையான பொழுது தனது துடுப்பாட்டத்தை மாற்றியமைத்து, பொறுப்பான, அதிரடியான ஆட்டம் என்பவற்றை வழங்கும் துடுப்பாட்ட வீரர்

குலேந்திரன் செல்ரன் - அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த, அபாயகரமான வீரர். எந்தநேரத்திலும் போட்டியை கையில் எடுத்து எட்டமுடியாத வெற்றியையும் அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார். அதிரடி ஆட்டம் இவரது பக்க பலம். விக்கெட் காப்பாளர் என்ற வகையில் இவரது பங்கு, அணிக்கு மகத்துவமானது

பூபாலசிங்கம் டர்வின் - இவரது துடுப்பாட்டம், கடந்தாண்டில் பல வெற்றிகளை அணிக்கு பெற்றுத் தந்துள்ளது. மத்திய வரிசையில் சிறப்பாக அடித்தாடும் துடுப்பாட்ட வீரர். இருந்தும், இவரது முக்கிய திறன் பந்துவீச்சு. மிதவேகப் பந்துவீச்சாளர்

பிரியலக்சன் உதயகுமார் - அணியின் துடுப்பாட்டப் பலம் இவர். இம்முறை பிரிவு 3 தொடரின் போட்டியொன்றில் 113 ஓட்டங்களை விளாசியிருந்தார்

நிரோஜன் பத்திநாதன் - அணியின் துடிதுடிப்பான களத்தடுப்பாளர். மிகவும் உற்சாகமாகச் செயற்படும் இவர் பல அசாத்தியமான களத்தடுப்புகளை மேற்கொண்டுள்ளார். மேலும், பின்வரிசையில் சிறப்பான துடுப்பாட்டத்தையும் இவர் மேற்கொள்வார்.

சாள்ஸ் பத்திநாதன் - அணியின் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளராக பல வெற்றிகளுக்குப் பங்களித்துள்ளார்.

சிவலிங்கம் தசோபன் - அணியின் நேர்த்தியான சுழற்பந்துவீச்சாளர். இவர் பொறுத்த தருணத்தில் விக்கெட்களைக் கைப்பற்றுவதில் வல்லவர். சிறப்பாக துடுப்பாட்டத்தை மேற்கொள்ளுவார்.

மயூரன் மகேந்திரன் - அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். பொறுத்த நேரத்தில் துடுப்பாட்டப் பங்களிப்பை வழங்குதற்கு மேலதிகமாக, எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை முன்னணிப் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலை வரும்போது, மயூரன் அதனை தனது பந்துவீச்சால் மாற்றியமைப்பார். பிரிக்க முடியாத இணைப்பாட்டங்களை எதிரணி வீரர்கள் மேற்கொண்டால், அதனை சரியான தருணத்தில் உடைப்பதில் சிறந்த பந்துவீச்சாளர்

சூரியகுமார் சுஜன் - இலங்கை 23 வயதுக்குட்பட்ட மாகாண அணிகளுக்குள் உள்வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர். இவரது பந்துவீச்சின் வேகம், பாணியை துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்ளத் தயங்குவார்கள்.

அலன்ராஜ் சிவபாதசுந்தரம் - அணியின் உள்ள மேலுமொரு சுழற்பந்துவீச்சாளர். தேவையான பொழுது துடுப்பாட்டத்திலும் பிரகாசிப்பார்.

எஸ். நிசாந்த் - அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர். பந்துகளை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு சிறப்பான ஆரம்பத்தை அணிக்காக வழங்குவார்)

தங்கராசா கோகுலன் - பொறுத்த தருணத்தில் துடுப்பாட்டம், சிறப்பான களத்தடுப்பை வழங்கி பக்கபலமாக இருப்பார்.

ஜேம்ஸ் ஜான்ஸன் - அணியின் ஆரம்ப அதிரடி நம்பிக்கை துடுப்பாட்ட வீரர். ஜேம்ஸ் சரியாகத் தொடக்கினால் அணியின் வெற்றி உறுதி என்ற அடிப்படையில் இவரது பங்களிப்பு அணியில் இருக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X