2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

புத்தளம் தம்பபன்னி பாடசாலை விளையாட்டு மைதானம் புனரமைப்பு

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் தம்பபன்னி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் விளையாட்டு மைதானம் பெற்றோர்களின் பங்களிப்புடன் செப்பனிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக சேறும் சகதியுமாக காணப்பட்ட புத்தளம் ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்து தருமாறு பாடசாலையின் அதிபர் எம்.டி. எம். மனாஸின் வேண்டுகோளை அடுத்து பெற்றோர்களில் ஒருவரான மன்சூர் சஹ்பானின் முயற்சியால் கொழும்பு றொட்ரிக் கழகத்தின் நிதி உதவி ஊடாக 20 லோட் பொரல் வழங்கப்பட்டதுடன் அதனை செப்பனிடும் பனியை பெற்றோர்களான கபீர் ஜவாத் மற்றும் ஆரிப் ஆகியோருடன் பொறியியலாளர் எம்.எப். றின்ஸாத் அஹமட், சர்ராஜ் லாபிர் மற்றும் ஆசிரியர் சிபாக் முன்வந்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் இவ்வேலைத்திட்டங்களுக்கான முழுமையான ஆதரவு வழங்கிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே.எம். பைசல் மற்றும் மைதான புனரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் தமது பாடசாலையின் நிர்வாகத்தின் சார்பாக தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அதிபர் எம்.டி.எம் மனாஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .