Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 ஜனவரி 17 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகத்தின் 34 ஆவது வருட நிறைவும் அதன் வருடாந்த பொதுக்கூட்டமும் புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் எம்.ஆர்.எம்.நில்பான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
செயலாளர் கே.எம். ஹிசாம் வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கையையும், பொருளாளர் எம். ரிஸான் வருடாந்த நிதி அறிக்கையினையும் சபையில் சமர்ப்பித்தனர்.
கழகத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு ஆலோசனைகளும் சபையில் முன்மொழியப்பட்டன.
தொடர்ந்து பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யும் நோக்கில் தற்காலிக இணை தலைவர்களாக கழக அங்கத்தவர்களான அஷ்ஷெய்க் ஜிப்னாஸ், அஷ்ஷெய்க் சகீனத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தற்காலிக இணைத் தலைமையில் நடைபெற்ற புதிய நிர்வாக சபை தெரிவில் நடப்பு வருட நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: ஜே. அஸ்வர்தீன்
செயலாளர்: கே.எம். ஹிசாம்
பொருளாளர்: எம்.ஐ.எம். மூஸீன்
உப தலைவர்கள்: ரனீஸ் பதியுதீன், எம்.ஆர்.எம். பரூஸ், ஏ.எம். அன்சார்
உதவிச் செயலாளர்: எம்.சீ.எம். இஸ்மத்
நிர்வாக உறுப்பினர்கள்: ஐ.ஏ. சிஹான், ஏ. ரிசான், எம்.வை. ரிழ்வான், கே.எம். சவாஹிர்
33 minute ago
2 hours ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
4 hours ago
9 hours ago