Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன ஏற்பாட்டில் ரமீஸ் ட்ரவல்ஸ் அண்ட் டுவர்ஸ் நிறுவன அனுசரணையில் நடத்தப்பட்டு வரும் வென்டஜ் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் 64 அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் இலங்கையின் பிரபல 32 அணிகள் பங்கேற்கும் தொடருக்குள் பிரவேசித்துள்ளது.
மன்னார் விடத்தல்தீவு யுனைட்டட் கால்ப்பந்தாட்ட கழகத்தினை வெற்றி கொண்டதன் மூலமே புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் இந்த சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் 32 சுற்றுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பினை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
குறித்த இந்த போட்டி பொலநறுவை தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
முதல் பாதியில் மன்னார் விடத்தல்தீவு யுனைட்டட் கால்ப்பந்தாட்ட கழகம் தொடரான இரு கோல்களைப் போட்டது.
இதேவேளை புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகமும் இரு கோல்களை போட இடைவேளையின் போது கோல் சமநிலையில் காணப்பட்டது.
இரண்டாவது பாதியில் போட்டி நிறைவுபெற 10 நிமிடங்கள் இருக்கும் தருவாயில் லிவர்பூல் மற்றுமொரு கோலினைப் போட, நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் புத்தளம் லிவர்பூல் அணியினர் 03 : 02 கோல்களினால் வெற்றி பெற்று அடுத்த 32 சுற்றுக்கான தகுதியினை பெற்றுள்ளனர்.
லிவர்பூல் அணிக்காக அதன் முன்வரிசை ஆட்டக்காரர்களான எம்.எம். முஸக்கீர் 02 கோல்களையும், எம். ரஸ்வான் 01 கோலினையும் பெற்றனர்.
22 minute ago
30 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
33 minute ago