2025 ஜூலை 05, சனிக்கிழமை

மிதவேக செஸ் சுற்றுப் போட்டி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன்

யாழ். சதுரங்க முற்றம் நடாத்தும் மிதவேக திறந்த செஸ் சுற்றுப்போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள லொயோலஸ் மண்டபத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது. 

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் , யாழ்ப்பாணம் லயன்ஸ் கழகம் என்பவற்றின் அனுசரணையுடன் நடைபெறும் இச்சுற்றுப் போட்டியானது ஒரே போட்டியாக நடைபெற்று 8 வயதின்கீழ், 10 வயதின்கீழ், 12 வயதின்கீழ், 15 வயதின்கீழ், மற்றும் திறந்த போட்டி என ஆண், பெண் என தனித்தனியாக 10 பிரிவுகளாக பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

ஏழு சுற்றுக்களாக நடைபெறவுள்ள இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கி 128 பேர் மட்டுமே பங்குபற்ற முடியும். 

பங்குபற்றும் அனைவருக்கும் பங்குபற்றுநர் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கப்படும். 

 இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் வீர்ர்கள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் நுழைவுக் கட்டணத்தினைச் செலுத்தி பதிவுசெய்யுமாறும், மேலதிக விபரங்களுக்கு போட்டி இணைப்பாளர் கா.ஆதவனுடன் (0777256481) தொடர்பு கொள்ளுமாறும் யாழ் சதுரங்க முற்றத்தினர் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .