2025 ஜூலை 05, சனிக்கிழமை

மைலோ கிண்ண கால்ப்பந்தாட்டம் ஆரம்பம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்.மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் நெஸ்ரில் லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி சனிக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.

இச் சுற்றுப்போட்டியில் 100 அணிகள் பங்குபற்றுவதுடன், போட்டிகள் விலகல் முறையில் நடைபெறவுள்ளன. போட்டிகள், ஈகிள்ஸ், வேலணை ஐயனார், மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொலின்ஸ் விளையாட்டுக்கழகம், உதயசூரியன் விளையாட்டுக்கழகம், அரியாலை விளையாட்டரங்கு ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய ஒவ்வொரு கால்ப்பந்தாட்ட லீக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தனித்தனியாக முதலில் போட்டிகள் நடைபெற்று, ஒவ்வொரு லீக்கிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கிடையில் அடுத்த சுற்றுப்போட்டிகள் நடைபெறும்.

இந்தச் சுற்றுப்போட்டியின் முதல் வருடத்தில் 24 அணிகளும் இரண்டாம் வருடத்தில் 60 அணிகளும் பங்குபற்றியிருந்தன. கடந்த வருடம் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியிருந்தது.

மைலோ கிண்ணம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (08) மாலை இடம்பெற்றது. இதில் யாழ்.மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்;டச் செயலர் செந்தில்நந்தணன், யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா, யாழ்.மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர்.மோகனதாஸ், நெஸ்லே லங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு மற்றும் ஆனுசரணை முகாமையாளர் சுகத் சஜீவ விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். சுகத் சஜீவவால் மைலோ கிண்ணம் யாழ்.மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .