Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். சுஜிதா
பாடசாலைகள் மட்டத்தில், நாடளாவிய ரீதியில் நடைபெற்ற கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், கொட்டக்கலை யதன்சைட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட மகளிர் அணி, இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இவ்வணி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் முதலிடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சமபோஷ கிண்ணத்துக்காகவே, இந்த கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டு வருகிறது. இதன் இறுதிப் போட்டி, எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதிகளில், நீர்கொழும்பு - வென்னப்புவ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago