Freelancer / 2023 நவம்பர் 01 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
அமரர் ச.சந்திரகாந்தன் ஞாபகார்த்த மழலைகள் உதைபந்தாட்ட கொண்டாட்ட சுற்றுப்போட்டியில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது புதன்கிழமை (31) காலை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

குறித்த போட்டியில் வட மாகாணத்தில் 8 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட முதற் சுற்றுப்போட்டியான இப்போட்டியில்
தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமி , மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி , கோண்டாவில் றொனால்டோ அக்கடமி , அரியாலை யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட அக்கடமி , மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் மற்றும் வேலணை ஐயானார் அக்கடமி ஆகிய 6 அணிகள் பங்கெடுத்திருந்தன.
இறுதிப் போட்டியில் மருதனார்மடம் நொதேர்ண் ஸ்போட்ஸ் கொலிச் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அக்கடமி அணி விளையாடியது. இதில் மயிலங்காடு ஞானமுருகன் அணி 4 : 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. M

9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025