Shanmugan Murugavel / 2025 ஜனவரி 23 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கு 16 மில்லியன் ரூபாய் செலவில் மின்னொளி பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த மைதானத்துக்கு நவீன மின்னொளியை பொருத்தித் தருமாறு பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள், சமூக அமைப்புக்கள், சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் நீண்ட காலமாக பிராந்திய அரசியல் தலைவர்களிடத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் குறித்த மைதானத்துக்கு மின்னொளி பொருத்துவதற்கு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன் 2 மில்லியன் ரூபாய் நிதியை முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்திருந்தார். பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் 14 மில்லியன் ரூபாய் நிதியை குறித்த மைதானத்தில் மின்னொளி பொருத்தி நவீன மைதானமாக புனரமைப்பு செய்வதற்கு என ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்த வேலை திட்டத்தை கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை முன்னெடுத்தன. இவர்களின் அனுமதிக்கு அமைய தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொறுப்பளிக்கப்பட்டு தற்போது அதி நவீன மின்னொளி பொருத்தும் நடவடிக்கைகள் மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நவீன மின்கம்பங்களைக் கொண்டு நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதேச விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
20 minute ago
1 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
30 Oct 2025