2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முடிசூடிய மட்டு வின்சன்ட் உயர்தரப் பாடசாலை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ. சக்தி       

பாடுமீன் கிரிக்கெட் சமரானது கடந்த மூன்று ஆண்டுகளின்பின் நடைபெற்ற நிலையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பாடசாலை முடி சூடியது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற புனித சிசிலியா மகளிர் கல்லூரியுடனான 10ஆவது பாடுமீன் கிரிக்கெட் சமரிலேயே வெற்றி பெற்று வின்சன்ட் முடிசூடியது.

இப்போட்டியானது 20 ஓவர்களை கொண்ட மென்பந்தாட்டப் போட்டியாக அமைந்த நிலையில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வின்சன்ட் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய புனித சிசிலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களையே பெற்று மூன்று ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும், சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாகவும் வின்சன்ட் அணித்தலைவி சானுஜா கமலேஸ்வரன் தெரிவாகியதுடன், சிறந்த பந்துவீச்சாளராக சிசிலியாவின் ஈ. மெருஷா தெரிவாகினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X