2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முல்லைதீவு மாவட்ட கபடி, கரப்பந்தாட்டம்

சண்முகம் தவசீலன்   / 2019 மே 28 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}



 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரநடவடிக்கைகள்  வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  31ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முல்லைத்தீவு மாவட்ட மட்ட  பெருவிளையாட்டுக்களில் கபடி, கரப்பந்தாட்டத் தொடர்கள், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் அண்மையில்  சிறப்பாக இடம்பெற்றன 

அந்த வகையில்  நடைபெற்று முடிந்த போட்டிகளில், பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் மணலாறு பிரதேச செயலகம் சம்பியனானதுடன்,  துணுக்காய் பிரதேச செயலகம் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தது.

ஆண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் சம்பியனானதுடன், மணலாறு பிரதேச செயலகம் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தது.

அதேபோன்று ஆண்களுக்கான கபடித் தொடரில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் சம்பியனானதுடன், மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தது.

பெண்களுக்கான கபடித் தொடரில், துணுக்காய் பிரதேசய செயலகம் சம்பியனானதுடன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X