R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாக குழு உறுப்பினர்கள், புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் எம்.எப்.எம்.ரின்ஷாத் அஹ்மத் அவர்களை மாநகர சபை காரியாலயத்தில் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை (03) அன்று எதிர்கால காற்பந்தாட்ட அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
புத்தளம் மாநகர சபையின் பொறுப்பில் இருக்கின்ற புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் காற்பந்து போட்டிகளை நடத்தும்போது எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக நுழைவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்வதில் ஏற்படுகின்ற இழுபறிகள், விளையாட்டு வீரர்கள் இடைவேளையில் அமைதியாக இருந்து ஓய்வு எடுக்கின்ற இட அமைப்புகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
மேயர் ரின்ஷாத் அஹ்மத் அவர்கள், மாநகர சபை மைதானம் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கூடிய விரைவில் எடுப்பதாக இதன் போது உறுதியளித்தார்.
இதன்போது புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் தலைவர் முஹம்மது யமீன் அவர்களால் புத்தளம் மாநகர சபையின் மேயர் அவர்களுக்கு புத்தளம் காற்பந்தாட்ட லீக் சார்பாக நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago