Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 17 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் தடகள மற்றும் மைதான விளையாட்டுப் போட்டிகளின், 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் 528 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தடகள மற்றும் மைதான போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன. இதில், வழமைக்கு மாறாக இம்முறை மன்னார் கல்வி வலயம் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தது. மூன்றாம் நாள் வரையிலும் மன்னார் கல்வி வலயம் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், நான்காம் நாளில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தை 507 புள்ளிகள் பெற்ற மன்னார் கல்வி வலயமும், மூன்றாமிடத்தை 373 புள்ளிகள் பெற்ற வலிகாமம் கல்வி வலயமும் பெற்றுக்கொண்டன. தொடர்ந்து வரும் இடங்களை, வடமராட்சி - 298, கிளிநொச்சி - 263, முல்லைத்தீவு - 233, துணுக்காய் - 150, வவுனியா தெற்கு 136, மடு - 124, தென்மராட்சி - 94, வவுனியா வடக்கு - 59, தீவகம் - 22 ஆகிய வலயங்கள் பெற்றுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025