Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், அணிகளை தரம் பிரிப்பதற்கான சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது.
யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 24 அணிகளுக்கிடையில் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளது. சுற்றுப்போட்டி 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் உள்ளதுடன், அவ்வணிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்படும். இரண்டு போட்டிகளிலும் தோல்வியுறும் அணிகள் சி பிரிவில் உள்வாங்கப்படும். அடுத்த சுற்றுக்குத் தெரிவாகி தட்டுப்படும் அணிகள் பி பிரிவாகவும் காலிறுதி வரையில் முன்னேறும் அணிகள் சி பிரிவாகவும் தரப்படுத்தப்படும்.
இனிவருங்காலங்களில் யாழ்.மாவட்டக் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் பிரிவு -3 க்கான 50 ஓவர் சுற்றுப்போட்டிகளில் ஏ பிரிவு அணிகள் மாத்திரம் பங்குபற்றும். ஏ பிரிவில் பங்குபற்றும் அணிகள் 8 இலும் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் அணிகள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்துக்கு பி பிரிவில் முன்னிலையில் இருக்கும் அணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago