Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் (12) சனிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
போட்டியில் பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.இராஜாங்க அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இரு போட்டிகள் இடம் பெற்றதுடன், இரு போட்டிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி வெற்றிபெற்றது.
போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துடுப்பெடுத்தாடி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இதன்போது முதல் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் அணியும் இராஜாங்க அமைச்சர்களுக்கான அணியும் போட்டி பரீட்சையில் ஈடுபட்டது. முதல் போட்டியில் நாணயம் சுழட்சியில் பாராளுமன்ற அணி வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்மைய சம்பத் அதுகோரல மற்றும் டபிள்யூ. டீ.வீரசிங் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினார்கள்.சம்பத் அதுகோரள்ள இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 19 ஓட்டங்களை பெற்றார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டபிள்யூ. டீ. வீரசிங்க நான்கு சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களை பெற்றார். அணிசார்பில் தயாசாந்த நவனந்த 29 ஓட்டங்களையும் நாமல் ராஜபக்ஷ 21 ஓட்டங்களையும் பெற்றனர். 20 ஓவர் நிறைவில் 128 ஓட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் அணி பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராஜாங்க அமைச்சர் அணியின் சார்பில் நிஸாந்த மற்றும் ஜானக்க சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டிய போதிலும் இந்த அணி 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது. 48 ஓட்டங்களால் பாராளுமன்ற அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பாராளுமன்ற அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
ஆட்ட நாயகனாக பாராளுமன்ற அணியை சேர்ந்த தயாசாந்த நவதந்தவும் சிறந்த துடுப்பாட்ட வீரராக டபிள்யு. டீ. வீரசிங்கவும் சிறந்த பந்து வீச்சாளராக இராஜாங்க அமைச்சர் அணியை சேர்ந்த பிரேமலால் ஜயசேக்கரவும் சிறந்த விக்கெட் காப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சீ. பீ.ரட்னாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாராளுமன்ற அணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் சவால் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago