Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 22 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையர்களின் அபிமானம் வென்ற முதல்தர சொக்லட் வர்த்தக நாமமான, சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பான ரிட்ஸ்பரி, பெருமைக்குரிய ரிட்ஸ்பரி சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தொடர்ச்சியான 11ஆவது ஆண்டாகவும் ஏக அனுசரணை வழங்க வழங்க முன்வந்துள்ளது. இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்படும் மெய்வல்லுநர் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், இளம், கனவுகள் நிறைந்த மெய்வல்லுநர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இம்முறையும் அனுசரணை வழங்க ரிட்ஸ்பரி முன்வந்துள்ளது.
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சம்மேளனத்துடன் (SLSAA) ரிட்ஸ்பரி கைகோர்த்து, இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்பான அறிவிப்பை, கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஜுன் 20 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிட்டிருந்தது.
ரிட்ஸ்பரி ரிலே கானிவல் 2023 உடன் இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், ஜுன் மாதம் 24 முதல் 26 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறும். இதில் 200 பாடசாலைகளைச் சேர்ந்த 4000 க்கும் அதிகமான சிறுவர்கள் பங்கேற்கவுள்ளனர். 51 ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுநர் கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் 12 வயதுக்குட்பட்டவர்கள் முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் வரையான பிரிவுகளில் நடைபெறும். 91 ஆவது சிரேஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகள் அடங்கியிருக்கும். இந்தப் போட்டிகள் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் நடைபெறும்.
ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் நிலை 1 போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் ஜுலை 7 மற்றும் 8 ஆம் திகதிகளிலும், பெலியத்த டி.ஏ.ராஜபக்ச மைதானத்தில் ஜுலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளிலும், யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் திகதிகளிலும், பண்டாரகம பொது மைதானத்தில் ஆகஸ்ட் 19 முதல் 21ஆம் திகதி வரையும் நடைபெறும். இன, மத அல்லது மாகாண வேறுபாடுகள் எதுவுமின்றி நாடு முழுவதையும் சேர்ந்த 600 க்கும் அதிகமான பாடசாலைகளின் 20,000 க்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் டாபர்ட் சிரேஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகள் செப்டெம்பர் 12 முதல் 16 வரையில் நடைபெறவுள்ளதுடன், ஜோன் டாபர்ட் கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகள் நவம்பர் 3 முதல் 5 வரையில் நடைபெறவுள்ளது.
CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சொக்லட்கள் பிரிவில் சந்தை முன்னோடி எனும் வகையில், சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு மீண்டும் அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை கொள்கின்றது. இளம் மெய்வல்லுநர்களின் ஆற்றல்களில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அவர்களின் வெற்றிப் பயணத்துக்கு ஆதரவளிப்பதற்கு தொடர்ந்தும் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி. குசல பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ரிட்ஸ்பரியின் அனுசரணை என்பது, சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அதிகளவு பெறுமதி சேர்ப்பதாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்கு ஊக்கமளித்து, ஆதரவளிக்கின்றது. இந்த விளையாட்டு நிகழ்வு தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு ரிட்ஸ்பரி தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கியுள்ளது. நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த இளம் மெய்வல்லுநர்களின் திறமைகளை கட்டியெழுப்புவதற்கு இது ஆதரவளித்துள்ளது.” என்றார்.
சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு மேலதிகமாக, இலங்கையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளின் பெருமைக்குரிய அனுசரணையாளராகவும் ரிட்ஸ்பரி திகழ்கின்றது. இவற்றில் விதுதய ரிட்ஸ்பரி நீச்சல் சம்பியன்ஷிப், ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப், ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ரக்பி சம்பியன்ஷிப் மற்றும் SLTA டெனிஸ் டென்ஸ் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் டெனிஸ் விளையாட்டு தினம் போன்றன அடங்குகின்றன. விளையாட்டினூடாக தேசத்தின் இளைஞர்களின் திறன்களை கட்டியெழுப்புவதில் சொக்லட் வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பு இவற்றினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago