2024 மே 20, திங்கட்கிழமை

ரிட்ஸ்பரி ரிலோ கானிவல் 2023 விறுவிறுப்பாக நிறைவு

S.Sekar   / 2023 ஜூன் 30 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இளைஞர்களின் மெய்வல்லுநர் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிட்ஸ்பரி ரிலே கானிவல் 2023 வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொழும்பு சுகததாஸ மைதானத்தில் மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த போட்டிகளை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சம்மேளனம் (SLSAA) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையின் முதல்தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரி இந்நிகழ்வுக்கு ஏக அனுசரணை வழங்கியிருந்தது.

திறன்கள், விடாமுயற்சி மற்றும் விளையாட்டுப் பண்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன், இதில் நாடு முழுவதையும் சேர்ந்த 220 பாடசாலைகளின் 4000 க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டிருந்தனர்.

நீர்கொழும்பு, மாரிஸ் ஸ்டெலா கல்லூரியின் அணியினர் தமது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆண்கள் பிரிவில் 95 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றனர். கண்டி திரித்துவக் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், கொழும்பு புனித பத்திரிசிரியார் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

வலல ஏ.ரத்நாயக்க மத்திய கல்லூரி அணி பெண்கள் பிரிவில் 113 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது. லைசியம் சர்வதேச பாடசாலை அணி இரண்டாமிடத்தையும், அம்பகமுவ மத்திய கல்லூரி மூன்றாமிடத்தையும் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X