2025 ஜூலை 03, வியாழக்கிழமை

றகர் போட்டியில் தலவாக்கலை செம்பியன்

Editorial   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடையிலான 2019ஆம் ஆண்டுக்கான றகர் விளையாட்டுப் போட்டியில், தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவன அணி செம்பியனானது.   

டிக்கோயா தரவளை விளையாட்டு மைதானத்தில், சனிக்கிழமை (30) நடைபெற்ற இந்தப் போட்டியில், 13 பெருந்தோட்டங்களின் அணிகள் பங்கேற்றன.   

சி.ஐ.சி நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டியில், தலவாக்கலை பெருந்தோட்ட அணியும் எல்கடுவ பெருந்தோட்ட அணியும் மோதிக்கொண்டன.   

தலவாக்கலை பெருந்தோட்ட அணி 33 கோல்களைப் பெற்று, செம்பியன் பட்டத்தைத் தனதாக்கியது. போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாக, தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் வீரர் சரத்ரனவீர தெரிவானார்.   
மேலும் இப்போட்டியில், பிலேட் கேடயத்தை மல்வத்த பெருந்தோட்ட அணியும் போல் கேடயத்தை எல்பிட்டி அணியும் பெற்றுக்கொண்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .