2025 ஜூலை 05, சனிக்கிழமை

வென்றது புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 30 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மர்ஹூம் எஸ்.எல். அப்துல்லாவின் ஞாபகார்த்தமாக புத்தளத்தில் ஆரம்பித்துள்ள "மர்ஹூம் அப்துல்லா வெற்றிக்கிண்ண" புதிய கால்பந்தாட்ட தொடரில் முதலாவது கால் இறுதிப் போட்டியில் புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

புனித நோன்பு காலத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி தொடரானது நோன்புக்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டபோதே த்ரீ ஸ்டார்ஸ்  அணியானது இந்த வெற்றிதனை அடைந்துள்ளது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற  இந்தப் போட்டியில் த்ரீ ஸ்டார்ஸ் அணியோடு புத்தளம் லீக்கில் பதிவாகியுள்ள யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணி எதிர்த்தாடியது. இந்தப் போட்டியில் த்ரீ ஸ்டார்ஸ் அணியானது 4 -2 கோல்களினால் வெற்றி பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .