Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரில் மீள உருவாக்கப்பட்ட ஒடிடாஸ் கால்பந்தாட்ட கழகத்துக்கும் புத்தளம் நகரின் பிரபலமான விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகத்துக்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கால்ப்பந்தாட்டப் போட்டியில், விம்பிள்டன் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியானது, புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.
அனைத்து வீரர்களையும் புதிய இளம் வீரர்களாக கொண்ட ஒடிடாஸ் அணிக்கு இது ஒரு கன்னி கால்பந்தாட்ட போட்டியாகும். இதேவேளை, புதிய வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கி விம்பிள்டன் அணியும் இந்தப் போட்டியில் தமது புதிய வீரர்களை களம் இறக்கி இருந்தது.
போட்டிக்கு நடுவர்களாக எம். ஜஹீர், எம். மனாகில், ஏ.எம். பவ்சான் ஆகியோர் கடமையாற்றினர்.
இந்தப் போட்டியில் விளையாடிய ஒடிடாஸ் கால்பந்தாட்ட கழகமானது 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் புத்தளம் நகரில் தோற்றுவிக்கப்பட்டு புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் பதிவாகிய கழகமாகும். அன்றைய நாளில் இந்த கழகத்தின் அனைத்து வீர்ரகளுமே இளமைத் துடிப்பு மிக்க உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களாக இருந்தது மட்டுமன்றி கழகம் ஆரம்பித்து மிக குறுகிய காலத்துக்குள்ளேயே புத்தளம் நகரின் ஏனைய அணிகளை ஏங்க செய்து பல வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்த அணியாகும்.
எனினும் கால ஓட்டத்தில் அதன் வீரர்கள் உயர் கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழகத்தில் கால்பதித்ததால் அவ்வணி முற்று முழுதாக மறைந்து போனது. இதே ஒடிடாஸ் அணியினை 27 வருடங்களுக்கு பிறகு தற்போது அதன் முன்னாள் வீரரும், புத்தளம் சாஹிறா தேசிய கல்லூரி விளையாட்டு பொறுப்பாசிரியரும், பிரதி அதிபரும், புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் செயலாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் மீள உருவாக்கி அதன் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகிறார். இதன் தற்போதைய தலைவராக இவ் அணியின் முன்னாள் வீரரும், இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் புத்தளம் மாவட்ட பணிப்பாளருமான அல்ஹாஜ் கலாநிதி எஸ்.ஆர்.எம். சராபத்துல்லாஹ் கடமையாற்றுகிறார்.
அடுத்து வரும் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் புதிய கால்ப்பந்தாட்ட தொடருக்கும் இந்த ஒடிடாஸ் அணி உள்வாங்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago