Gopikrishna Kanagalingam / 2015 நவம்பர் 12 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், அநுராதபுரம் மத்திய கல்லூரி, முதலில் துடுப்பெடுத்தாடியது.
அவ்வணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் விக்கிரம 23 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில், கே. மதுசன் 5 விக்கெட்டுகளையும் ஜனார்த்தனன் 3 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணி, 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
சென். ஜோன்ஸின் யூடிற் 33 ஓட்டங்களையும் வினோசன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், அசங்க 4 விக்கெட்டுகளையும் நவின் பண்டார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 75 ஓட்டங்களால் பின்தங்கியிருந்த நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அநுராதபுரம் மத்திய கல்லூரி, 5 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி, வெற்றி தோல்வியற்ற முறையில் முடிவடைந்தது.
எனினும், முதல் இனிங்ஸில் முன்னிலை பெற்ற காரணத்தால், போட்டிக்கான புள்ளிகள், சென். ஜோன்ஸ் கல்லூரிக்குக் கிடைத்தன.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago