Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் குழு “பி” சுப்பர் 8 சுற்றுப் போட்டியொன்றில், மன்னார் சென்.ஜோசப் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
சென்.ஜோசப் விளையாட்டுக் கழகத்துக்கும் நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான குறித்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்.ஜோசப் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. முதற்பாதி ஆட்டநேர முடிவில், சென்.மேரிஸ், கையால் பந்தைக் கையாண்டமை காரணமாக, சென்.ஜோசப் விளையாட்டுக் கழகத்துக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டியை, அவ்வணியின் ராஜ்கமல் கோலாக்கியதன் மூலமே அவ்வணிக்கு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக, சென்.ஜோசப் அணியின் கோல்காப்பாளர் அனோஜன் தெரிவு செய்யப்பட்டதுடன், அவருக்குகான பதக்கத்தினை, கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் நலன்விரும்பு சீ.சிவநேசன் அணிவித்த்துடன், வெற்றி பெற்ற அணிக்கான பணப்பரிசினை, மாதர் சங்க தலைவி பி.பாலாமணி வழங்கினார்.
சுப்பர் 8 சுற்றில், குழு “ஏ”யில், மன்னார் கில்லரி, மன்னார் சென்லூசியஸ், குருநகர் பாடுமீன், பாசையூர் சென்.அன்ரனிஸ் ஆகிய அணிகளும் குழு “பி”யில் நாவாந்துறை சென்.மேரிஸ், மன்னார் சென்.ஜோசப், ஊரெழு றோயல், பலாலி விண்மீன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, இதுவரை இடம்பெற்ற ஏனைய சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில், குழு “ஏ”யில், மன்னார் கில்லரியை, மன்னார் சென்.லூசியஸ் வென்றுள்ளதுடன், குருநகர் பாடுமீனை, பாசையூர் சென்.அன்ரனிஸ் வென்றுள்ளது. குழு “பி”யில், பலாலி விண்மீனை, ஊரெழு றோயல் வென்றுள்ளது.
இன்றைய, குழு “பி” ஆட்டமொன்றில், பலாலி விண்மீனும் நாவாந்துறை சென்.மேரிஸும் இரவு எட்டு மணிக்கு, மின்னொளியில் இடம் பெறும் போட்டியில் மோதவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025