2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வட மாகாண எறிபந்து: கிராமப்புற பாடசாலைகள் பிரகாசிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்தாட்டத்தில், 17 வயதுக்குட்பட்ட ஆண்களில் முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் மகா வித்தியாலயம் சம்பியனானதுடன், மன்னார் அடம்பன் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றது.

இதேவேளை 20 வயதுக்குட்பட்ட ஆண்களில் வவுனியா காங்கராயன்குளம் மகா வித்தியாலயம் சம்பியனானதுடன், மன்னார் அடம்பன் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றது.

இந்நிலையில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் வவுனியா காங்கராயன்குளம் மகா வித்தியாலயம் சம்பியனானதுடன், யாழ்ப்பாணம் ராமநாதன் கல்லூரி இரண்டாமிடத்தைப் பெற்றது.

இதேவேளை 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் மன்னார் அடம்பன் மகா வித்தியாலயம் சம்பியனானதுடன், வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்று மேற்கூறபட்ட பாடசாலைகள் அனைத்தும் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .