2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வடமாகாண உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம்

Mayu   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சின் மேற்பார்வையிலும், நெஸ்லே லங்கா நிறுவனத்தின்மைலோ வர்த்தக நாமத்தின் அனுசரணையிலும் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி நிகழ்வின் முதல் சுற்று 05 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

 மன்னார் மாவட்டத்தில்-24.02.2024 

 முல்லைத்தீவு மாவட்டத்தில்- 02.03.2024 

 வவுனியா மாவட்டத்தில் -09.03.2024

கிளிநொச்சி மாவட்டத்தில்16.03.2024

யாழ்ப்பாண மாவட்டத்தில் - 22.03.2024 அன்று  நடைபெறவுள்ளது.

இந்த மாவட்ட மட்ட போட்டிகளில் 05 மாவட்டங்களிலிருந்தும் 250 அணிகளும் 3750 விளையாட்டுவீர, வீராங்கனைகளும் பங்குபற்றுகின்றனர். 

முதல் முறையாக, ஒரு மாகாணத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அணிகள் மற்றும் வீர,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மாவட்ட  மட்ட வெற்றியாளர்களாக 02 வயதுப் பிரிவுகளில் இருந்தும் 16 ஆடவர்; மகளிர்அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்.

இதில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் தலா 04 அணிகள் உள்ளன. இந்த போட்டி நிகழ்வின் இறுதிச் சுற்றில் 80 அணிகளும் 1200 விளையாட்டு வீர,வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிகள் 23.03.2024 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெறும்.

இத்திட்டத்தின் மூலம் வடமாகாணத்தில் முதன்முதலாக உதைபந்தாட்டவிளையாட்டில் நுழையும் இந்த இரு வயதுப் பிரிவுவீர,வீராங்கனைகளின் உதைபந்தாட்ட விளையாட்டை விருத்தி செய்து,விளையாட்டுவீர,வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்தும் வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறமையானவிளையாட்டுவீரா,வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே விளையாட்டு பயிற்சிகளை வழங்கி, மாவட்ட அணிகளை அமைத்து பயிற்சிகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த மாவட்ட அணிக்கு,மாதத்திற்கு நான்கு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை சங்கத்தின் திறமையான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சிஅளிக்கப்படுகிறது.

இதனை கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்விதிணைக்களத்தின் மேற்பார்வையுடன் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தி வருவதுடன், நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ வர்த்தக நாமம் அனுசரணை வழங்குகின்றது.

பல தசாப்தங்களாக இலங்கைப் பாடசாலைகளில் அடிமட்ட விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வதற்கும் விளையாட்டுகளில் பன்மைத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் நெஸ்லே மைலோ, ஊட்டச்சத்தின் மூலம் சிறுவர்களை முன்னேற்றும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X