Freelancer / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்தாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பாக மருதமுனை மிமா விளையாட்டுக் கழகத்துடனான கலந்துரையாடல் பர்வின் ரெடிங் மற்றும் லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்று பணிப்பாளர் அல் ஹாஜ் கலீல் முஸ்தபாவுடன் மருதமுனை ஆத்தியடி தோப்பில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது மருதமுனை மிமா விளையாட்டு கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மிமா விளையாட்டு கழக வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025