Freelancer / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திற்கும் சம்மாந்துறை கிங்ஸ் இலவன் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இரண்டாவது ஆட்டத்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை கிங்ஸ் இலவன் விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 14.1 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் சிறப்பாட்ட காரனாக காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழக வீரர் ஆனந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025