Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத்துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பல முன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, சாதனைகளுக்குச் சொந்தமான உடற்கல்வி ஆசிரியரிகளை கௌரவிக்கும் 'வீர சூரி விருது’ வழங்கல் நிகழ்வு, இராமநாதன் வீதி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் ப. தர்மகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மடு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் க. சத்தியபாலன் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, வணிக முகாமைத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளர் தேவரஞ்சினி சிவாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விருது வழங்கல் நிகழ்வில், கு. பகீரதன் (வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்), ந. செந்தூரன் (தெல்லிப்பழை யூனியன் கல்லூரி), ப. வசந்தகுமார் (தொண்டமனாறு வீரகத்தி மகா வித்தியாலயம்), நா. ரவீந்திரன் (மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்), பா. பிரதீபன் (அளவெட்டி அருணோதய கல்லூரி), ஜெனிஸ்ரன் இதயகுமார் (இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம்), சோ. ஹரிதரன் (கிளிநொச்சி இந்துக் கல்லூரி), ந. மதிவதனன் (பாசையூர் சென். அன்ரனிஸ் மகா வித்தியாலயம்), ப. இராஜமனோகரன் (கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி), யோ. குபேசன் (ஊர்காவற்றுறை சென். அன்ரனிஸ் கல்லூரி) ஆகிய உடற்கல்வி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago