2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

வெண்கலப் பதக்கம் வென்ற ஜெயக்குமார்

Mayu   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல். ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட விளையாட்டு பயிற்றுநராக கடமையாற்றும்
பஞ்சாட்சரம் ஜெயக்குமார் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தைச்
சுவீகரித்துள்ளார்.

55 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே ஜெயக்குமார்
கலந்துகொண்டு 2.3மீற்றர் உயரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கையிலிருந்து 147 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதில் 84 பதக்கங்களை தனதாக்கி
கொண்டமை சிறப்பம்சமாகும்.

25 பேர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 34 பேர் வெள்ளிப் பதக்கத்தையும், 25 பேர் வெண்கலப்பதக்கத்தையும் வெற்றி பெற்று இலங்கை அணியானது எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிகழ்வில் தான் பெற்றுக்கொண்ட அனுபவம் தொடர்பாகவும்,  மாவட்டத்தில் கோலூன்றிப்
பாய்தலை இளைஞர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக தான் தயாராக இருப்பதாகவும்
ஜெயக்குமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X