Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நற்பிட்டிமுனை கிரிக்கெட் கழகம், நற்பிட்டிமுனை பொது மைதானத்தில் ஒழுங்கு செய்திருந்த 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 19 ஓட்டங்களால் சாய்ந்தமருது கிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை நற்பிட்டிமுனை கிரிக்கெட் கழகம் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நற்பிட்டிமுனை கிரிக்கட் கழகம், முதலில் துடுப்பெடுத்தாடி 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 145 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 18 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.
இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ. கையும் பிரதம அதிதியாகவும், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026