2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வென்றது மருதமுனை கோல்ட் மைன்ட்

ஏ.எல்.எம்.சினாஸ்   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெற்றிக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் ஆரம்பப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் வென்றது.

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்ப நாள் நிகழ்வுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் மருதம் விளையாட்டுக் கழகத்தை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் தோற்கடித்திருந்தது.

குறித்த ஆரம்பநாள் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொடரை ஆரம்பித்து வைத்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். மனாப்,மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி, ஏ.ஆர். அமீர், தொடரின் தவிசாளர் அப்பாஸ் எம். நியாஸ், யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் கணக்காளருமான றிஸ்வி யஹ்ஸர்,செயலாளர் ஏ.எம்.எம். ரஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X