Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2018 மார்ச் 12 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரியலக்சன், செல்ரன், டர்வினின் துடுப்பாட்டத்தால் சென். ஜோன்ஸ் (ஜொனியன்ஸ்) பழைய மாணவர் அணியை வீழ்த்தி, யாழ்ப்பாணம் மத்தி (சென்றலைட்ஸ்) பழைய மாணவர் அணி இலகு வெற்றியொன்றைப் பதிவு செய்தது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினதும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினதும் பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியானது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் பழைய மாணவர் அணி, 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அன்புஜன் 57, அமிர்தஜன் 54, பிருந்தாபன் 25, சிறிதரன் 20, டானியல் 18 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜெரிக்துசாந்த் 4, ராகவன், செல்ரன் ஆகியோர் தலா 2, அலன்ராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 256 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய பழைய மாணவர் அணி, 35.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், பிரியலக்சன் 78, செல்ரன் 50, டர்வின் 43, அலன்ராஜ் 29, றஜீவன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டானியல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
32 minute ago
35 minute ago