2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹொக்கியில் ஓல்கோல்ட்ஸ் சம்பியன்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த விளையாட்டு விழாவின் ஹொக்கிச் சுற்றுப்போட்டியில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி சம்பியனாகியது.

10 அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டி தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற போது, ஓல்ட் கோல்ட்ஸ் அணியை எதிர்த்து தெல்லிப்பழை யூனியன் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் யூனியன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், இரண்டாவது பாதியில் ஆட்டந் தொடங்கிய சில நிமிடங்களில் யூனியன் அணி மேலும் ஒரு கோலைப் போட்டு, தம்மைப் பலப்படுத்திக் கொண்டது.

எனினும், வீறுகொண்டெழுந்த ஓல்ட் கோல்ட்ஸ் அணி, அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது. ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் பெற்றிருந்தமையால், வெற்றியாளரை தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் ஓல்ட் கோல்ட்ஸ் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .