2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

ஹெஷன் விளையாட்டு கழகம் வென்றது

Editorial   / 2017 ஜூன் 11 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடாத்தப்படுகின்ற பிரிவு 3 தொடரின் குழு ஈ-இன் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில், ஹெஷன் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.   

பிலியந்தல நகர கிரிக்கெட் கழகத்தை, கிரிந்திவல கிரிக்கெட் மைதானத்தில், நேற்று (10) எதிர்கொண்ட ஹெஷன் விளையாட்டுக் கழகம், 228 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.   

மேற்படி போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஹெஷன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் றசிக சந்தன, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஹெஷன் விளையாட்டுக் கழகம், 50 ஓவர்களில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 484 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், தரிந்து சுராஜ் 138 (100), றசிக சந்தன 117 (106), அசேல ஜயசிங்க 111 (49) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சமீர புஷ்பகுமார, தினுக கொடகந்த ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

பதிலுக்கு, 485 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிலியந்தல நகர கிரிக்கெட் கழகம், 43 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டி. ஹெட்டியாராச்சி 52 (49), தினுக கொடகந்த 47 (47) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், யுகீஷ டில்ஷான் 4, றசிக சந்தன, நிமேஷ் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

இதேவேளை, உரபொல கிரிக்கெட் மைதானத்தில், இம்மாதம் எட்டாம் திகதி, சண்றைடஸ் கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட ஹெஷன் விளையாட்டுக் கழகம், 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.   

குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற் சண்றைடர்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் துலர விஜேசிங்க, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஹெஷன் விளையாட்டுக் கழகம், 32.2 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், யுகீஷ டில்ஷான் 38 (56), நிமேஷ் பெரேரா 37 (14), தரங்க இந்திக 49 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சாருக வீரசிங்க நான்கு, அரவிந்த அத்துக்கோரள மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

பதிலுக்கு, 163 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சண்றைடர்ஸ் கிரிக்கெட் கழகம், 41 ஓவர்களில், சகல விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டுஷன் சச்சிந்த 42 (46), டினுக மதுஷன் 36 (32) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லலித் பிரசன்னா ஐந்து, யுகீஷ டில்ஷான் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X