2026 ஜனவரி 28, புதன்கிழமை

3 கிலோ ஐஸூடன் ஒருவர் கைது

Janu   / 2026 ஜனவரி 26 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களான வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப். ஜகத் ஆகியோருக்கு நெருக்கமான ஒருவர், 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கைத்தொலைபேசி மற்றும் 2 தராசுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ரிட்ஜ்வே பிளேஸ் வீதியில் வைத்து ஐஸ் போதைப்பொருள்  வைத்திருந்த நபர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பின்னர் குறித்த ஐஸ் மற்றும் ஏனைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X